மைதானத்தில் நோர்வூட் பிரதேச சபையினை இயங்க எடுக்கும் முயற்சிகள் முட்டாள்தனம்!
நோர்வூட் விளையாட்டு மைதானம் இளைஞர் யுவதிகளின் விளையாட்டினை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த விளையாட்டு மைதானத்தில் நோர்வூட் பிரதேச சபையினை இயங்க செய்வதற்கான முயற்சிகள் வெறும் முட்டாள்தனமான காரியம் என முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (04) இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "தற்போதைய அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துள்ளது. இது எமது முன்னேற்றத்திற்கு உகந்ததுதல்ல. காரணம் மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அந்த வேலைகளை நிறைவேற்றவில்லை, நோர்வூட் விளையாட்டு மைதானம் இளைஞர் யுவதிகளின் விளையாட்டினை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.
நோர்வூட் விளையாட்டு மைதானம்
இதில் உள்ள கட்டிடங்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் விளையாட்டு துறையினை அபிவிருத்தி செய்வதற்கு மாத்திரம் உள்ளது. இதில் நோர்வூட் பிரதேச சபையினை இயங்க செய்வதற்கான முயற்சிகள் வெறும் முட்டாள்தனமான காரியம் முதலில் அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். சில பொருட்களுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது.
இவற்றுக்கு ஒரு முடிவினை எடுக்க வேண்டும், சர்வதேச ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும், ஜனாதிபதி தேர்தலின் போது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1700 ஆக அதிகரிக்கப்படும் என தெரிவித்தனர்.
அதற்கு இன்றுவரை ஒரு முடிவில்லை இவ்வாறான பல முக்கிய விடயங்களை செயற்படுத்தாமல் விளையாட்டு மைதானத்தில் நோர்வூட் பிரதேச சபையினை இயங்க செய்வதற்கான முயற்சிகள் ஒரு வேடிக்கையான ஒரு சம்பவம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
