இலங்கையின் நெருக்கடி நிலை குறித்து நோர்வே கரிசனை
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை குறித்து நோர்வே அரசாங்கம் கரிசனை வெளியிட்டுள்ளது.
நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் அன்னிகன் ஹுட்பெல்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிக மோசமான மனிதாபிமான சூழ்நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எச்சரிக்கை
இந்த நெருக்கடி நிலையினால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உரிய நடவடிக்கை உடன் எடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் மாதங்களில் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு உதவும் நோக்கில் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க நோர்வே தீர்மானித்துள்ளது.
நோர்வே வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.