உங்கள் எதிர்காலத்திற்கான வாழ்விற்கு இன்றே வழி அமைத்திடுங்கள்..
இந்த பாரில் மனித சமூகம் ஏனைய ஜீவராசிகளில் இருந்து வேறுபட்டும் உயர்ந்தும் காணப்படுவதற்கு அவனது நாகரீக வளர்ச்சி பிரதான ஏதுவாக காணப்படுகின்றது. அந்த வகையில் மனிதன் நாளுக்கு நாள் நாகரீக வளர்ச்சிப் படிகளில் உச்சம் தொட்டு வருகின்றான்.
கல்வி புரட்சியின் ஊடாக எந்த இலக்கினையும் எட்டிப்பிடித்து விட கூடியதாக அமைந்துள்ளது. நாம் எத்தனையோ வியாபாரங்களுக்காகவும் பல்வேறு விடயங்களுக்காகவும் முதலீடுகளை செய்திருக்கின்றோம் அல்லது செய்ய உத்தேசித்து இருப்போம்.
எனினும் பெற்றோராகிய நீங்கள், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யக்கூடிய அதிசிறந்த முதலீடாக அவர்களின் கல்வித் தகமைகளை உயர்த்துவதே சாலப் பொருத்தமானதும் நிலையான முதலீடாகவும் அமையும் என்றால் அதில் பிழையில்லை.
இலங்கையில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில தனியார் கல்வி நிறுவனங்களில் உலகத்தரம் வாய்ந்த கற்கை நெறிகள் தற்பொழுது கற்பிக்கப்படுகின்றன. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நோர்தன் யுனிவர்சிட்டி உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழிநுட்பத் துறை சார் கற்கை நெறிகளை வழங்கி வருகின்றது.
நோர்தன் யுனிவர்சிட்டி உலகின் முதல்நிலை பல்கலைக்கழகங்கள் பலவற்றுடன் இணைந்து சேவையை வழங்கி வருகின்றது. பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வடக்கில் கல்வி சேவை வழங்கி வருகின்றது.
இந்த பல்கலைக்கழகங்களின் ஊடாக தற்காலத்திற்கு தேவையான பல்வேறு தகவல் தொழிநுட்ப மற்றும் தொழில்சார் கற்கை நெறிகள் கற்பிக்கப்படுகின்றன. பொதுவாக பல்கலைக்கழக கற்கை நெறிகள் என்றாலே அவை ஓர் தொழிலை அல்லது தொழிற்சந்தையை இலக்கு வைத்து வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் அனேகமான பட்ட கற்கை நெறிகள் இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த எண்ணக்கருவினை இலங்கையில் அதுவும் வடக்கு, கிழக்கு மாணவச் செல்வங்களுக்கும் வழங்கும் நோக்கில் நோர்தன் யுனிவர்சிட்டி பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
இந்தியா போன்ற நாடுகளில் பல்கலைக்கழக கற்கை நெறியுடன் தொழிற்சார் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அந்த மாணவர்களை போட்டி மிகு தொழிற்சந்தைக்கு ஆயத்தப்படுத்தும் நிலையை அவதானிக்கலாம். அந்த வகையில் நோர்தன் யுனிவர்சிட்டி பல்கலைக்கழகமும் இந்த அரிய சேவையை வழங்கி வருகின்றது.
சுமார் 50 உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து நடப்பு உலகின் தொழிற் பிரிவுகள், கற்றல் விடயங்களை நடைமுறை ரீதியில் மாணவர்கள் புரிந்து கற்கவும் அனுபவங்களை பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக அநேக பல்கலைக்கழகங்களில் இந்த வசதிகள் குறைவாகவே காணப்படுகின்றன, வெறும் ஏட்டுக்கல்வியைக் கொண்ட மாணவர்களினால் தற்கால தொழிற்சந்தையில் போட்டியிட முடியாது என்பது கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
எனினும் நோர்தன் யுனிவர்சிட்டி பல்கலைக்கழகம் நடப்பு உலகின் சூட்சுமங்களை புரிந்து கொண்டு மாணவர்களின் மெய்யான தேவையை முழுக்க முழுக்க கவனத்திற்கு கொண்டு கற்கை நெறிகளை வடிவமைத்து அவற்றை சிறந்த சீரிய முறையில் முன்னெடுத்து வருகின்றது என்றால் அது மிகைப்பட போவதில்லை.
எனவே உங்கள் பிள்ளைகளது அல்லது உங்களது தொழில்சார் திறனை விருத்தி செய்து இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சரியான ஓர் இடத்தில் தரமான கற்கை நெறியொன்றை தேர்வு செய்து கற்க வேண்டியது இன்றியமையாததாகும்.
அதற்காக நாம் செலவிடும் ஒவ்வொரு ரூபாவும் அர்த்தமுள்ளதாக எதிர்காலத்தில் லாபகரமான முதலீடாக மாற்றமடைய வேண்டுமாயின் நோர்தன் யுனிவர்சிட்டி பல்கலைக்கழகத்தை நாடுங்கள். நிச்சயம் உங்கள் எதிர்பார்ப்பு இம்மியளவு குறையாது ஈடேறும் என்பது திண்ணம்.
Visit our website:- https://northernuni.lk/
மேலும் தகவல்களுக்கு :- 0771471471