வடக்கு கடற்தொழிலாளர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது: விகாராதிபதி அறிவுறுத்தல்
வடக்கு கடற்தொழிலாளர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது, அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ். ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனை
வடக்கு கடற்தொழிலாளர்களை நேற்று (08.11.2022) சந்தித்து கடலட்டை விவகாரம் தொடர்பில் கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடபகுதியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தல்
இந்நிலையில் போதைப்பொருள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே கடற்தொழிலுக்கு செல்லும் கடற்தொழிலாளர்கள் தமது படகுகளில் ஏதாவது போதைபொருள் கடத்தப்படுவது தொடர்பில் தகவல் இருந்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் கடற்தொழிலாளர்களாகிய நீங்கள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலுக்கு
துணை போகக்கூடாது இந்த விடயம் தொடர்பில் கடற்தொழிலாளர்கள் அதிக அக்கறை செலுத்த
வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri