தமிழர் தரப்பை குற்றம்சாட்டுவது வேடிக்கையானது : சபா குகதாஸ் காட்டம்
தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வராததாலேயே 13 ஆம் திருத்தம் குறித்து ஜனாதிபதியால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை மிகவும் வேடிக்கையாக உள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று (09.08.2023) பண்ணாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் இயலாமை
13 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த தமிழர் தரப்பு அவசியம் இல்லை.இதனை உடனயாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலமைப்பின் அங்கமான 13ரை நடைமுறைப்படுத்தும் விடயம் தொடர்பில் தமிழர் தரப்பை குற்றம்சாட்டுவது அரசாங்கத்தின் இயலாமையே குறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |