வடக்கு மாகாண கடற்தொழிலாளர் சமாசங்கள் சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப முடிவு(Photos)
கடந்த வாரம் நாடாளுமன்றத்திலே இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் இந்திய படகுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்ட முடிவுகள் தொடர்பில் வடக்கு மாகாண கடற்தொழிலாளர் சமாசங்கள் சங்கங்கள் இணைந்து சில தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
குறித்த தீர்மானங்களையும், இந்திய படகுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான தமது நிலைப்பாட்டையும் கடிதம் ஊடாக ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று(26.02.2023) இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலின் போதே இதனை தெரிவித்துள்ளனர்.
இந்திய படகுகளுக்கு அனுமதி
மேலும் கூறுகையில்,23 க்கும் மேற்பட்ட சங்கம் சமாசங்கள் கலந்துக்கொண்டு கடந்த வாரம் நாடாளுமன்றத்திலே இலங்கையின் வெளிவிவகார அமைச்சினால் இந்திய படகுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டு அதன் முடிவுகள் விடப்பட்டிருக்கின்றன.
அந்த வகையிலே அதன் முடிவை முதலாவதாக நாங்கள் ஜனாதிபதிக்கு எங்களுடைய வடக்கு கடற்தொழிலாளர்களின் கடலை பாதுகாப்பது தொடர்பாக ஒரு கடிதத்தை எழுதி நாடாளுமன்ற உறுப்பினராக நாங்கள் அனுப்புவதற்கு தீர்மானித்துள்ளோம்.
கடந்த பல வருடங்களாக இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள் தொடர்பில் கடற்றொழிலில் சமூகம் பல்வேறு போராட்டங்களை நடாத்தி வந்த நிலையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தாங்கள் பிரதமராக பதவி வகித்த காலப்பகுதியில் 2016ஆம் ஆண்டு அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை கடற்தொழிலாளர் பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றி முன்கொண்டு சென்று நிரந்தரத் தீர்வை வழங்குவீர்கள் என நாம் எதிர்பார்த்தோம்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இந்தியக் கடற் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நடைமுறை, படகு தொழிலாளருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய இழுவைப் படகுகளால் எங்களுடைய கடல் வளமும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கோடி ரூபாய் சொத்துக்கள் அமைக்கப்பட்டு தங்களுடைய வாழ்வாதாரத்தை முன்கொண்டு செல்ல முடியாமல் உள்ளது.
நேரில் சந்தித்து கலந்துரையாடல்
எனவே எமது கடற்பகுதி இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரில் சந்தித்து கலந்துரையாட ஆவலாய் உள்ளோம்.
இலங்கையில் உள்ள கடற்பகுதியில் வெளிநாட்டு கடற்தொழிலாளர்கள் அழிப்பதையும் மேல்நிலை செய்யுமாறு வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சார்பாக நாங்கள் இலங்கையின் ஜனாதிபதியிடம் வேண்டி நிற்கின்றோம்.
கடிதத்தினை இன்று நாங்கள் ஜனாதிபதிக்கு அனுப்ப முடிவு செய்து உள்ளோம்.
எனவே வடக்கு கடற் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக நாங்கள் ஜனாதிபதியுடன் நேரடியாக சென்று கலந்துரையாட வேண்டும் என்ற கோரிக்கையை இன்று நான்கு மாவட்டங்களிலும் இணைந்து கூட்டப்பட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
