அரசாங்க நலத்திட்ட உதவிகளை பெறும் யாழ். மக்களுக்கான அறிவிப்பு
அரச நலத்திட்ட உதவிகளை பெறுபவர்கள் மீள பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடமராட்சி பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், வடமராட்சி பிரதேச செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரச நலன்புரி திட்டம்
2002 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்கத்தைக் கொண்ட நலன்புரி நன்மைகள் சட்டத்தின்
ஏற்பாடுகளுக்கு அமைவாக சகல நலன்புரி நிவாரண நன்மை கொடுப்பனவின் பொருட்டு
தகுதியான நபர்களை அடையாளம் காணுவதற்காக புதிய வேலைத்திட்டமொன்றை
நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பயனாளர்கள்
இதற்கமைவாக ஏற்கனவே பயன் பெற்றவர்கள் அல்லது அரசாங்கம் செயற்படுத்தும் சமுர்த்தி கொடுப்பனவு, முதியோர் கொடுப்பனவு, மாற்று வலுவுள்ளோர் கொடுப்பனவு, சிறுநீரக நோய்க்கான கொடுப்பனவு, பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவு போன்ற ஏதேனும் ஒரு நலத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்கள் குறித்த மீள் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவம்
குறித்த பதிவுகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவங்களை தரவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூரணப்படுத்தி சம்பந்தப்பட்ட கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோரிடம் சான்றுபடுத்தி 2022 செப்டெம்பர் 30ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
அத்துடன் சம்பந்தப்பட்ட கிராம அலுவலர், சமுர்த்தி அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அல்லது பிரதேச செயலக சமூக பாதுகாப்பு நலன்புரிகள் தொடர்பான உத்தியோகத்தரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்