போராட்டத்தில் குதித்த வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(13) வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி, முல்லத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
வெளி மாவட்ட சேவை காலத்தை நிறைவு செய்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், சரியான பொறிமுறையின் கீழ் இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநரை சந்திப்பதற்காக மூவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் சந்தித்து கலந்துரையாடியதோடு மனு ஒன்றையும் கையளித்தனர்.




மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan