வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றம்: 35ஆவது ஆண்டையொட்டி தமிழ் சமூகம் அரசியல் மன்னிப்புக் கோரல்!
இலங்கையின் வடக்கு மாகாண முஸ்லிம்கள் வலிந்து வெளியேற்றப்பட்ட துயரத்தின் முப்பத்தி ஐந்தாவது ஆண்டை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயான சகவாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் முஸ்லிம் சமூகத்தை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேற்றியமைக்காக அரசியல் மன்னிப்புக் கோருதல் ஆகியவற்றை வலியுறுத்தும் நிகழ்வு இன்று (நவம்பர் 8) மட்டக்களப்பு மியாமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து பெருமளவிலான தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை இணைப்பாளர் (Join Coordinator) ஜான்சன் பிகராடோ தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பின்வரும் முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்:
யாழ்ப்பாணம் - முகைதீன் தக்கியா சிவாலி பள்ளிவாயல் கதீப் அல்ஹாஜ் மௌலவி ஏ. எம். ஏ. அசீஸ் சமாதான மன்றத்தின் பணிப்பாளர் ஆறுமுகம் சொர்ணலிங்கம் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ். ஜெயசங்கர், மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம். எல். எம். இஸ்ஸதீன், மனித உரிமை செயற்பாட்டாளர் ரொக்கி பெர்னாண்டோ, யாழ்ப்பாண பெண்கள் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் எம். ஏ. எம். சியாமா ஆகியோர் உரையாற்றினர்.









சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam