ஆளுநர் தலைமையில் வடக்கு ஒருங்கிணைப்புக் கூட்டம்
வடக்கு மாகாண ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைதடியில் நடைபெறவுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா(Jeevan Thiyagarajah) தலைமையில் கைதடியில் உள்ள வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் காலதாமதம் அடையும் நிலைமையில் இந்த ஏற்பாட்டை ஆளுநர் மேற்கொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்துக்கு வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், நிர்வாக அதிகாரிகள் எனப் பலரும் அழைக்கப்பட்டுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
மேற்படி கூட்டம் கடந்த 10ஆம் திகதி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு
நாடாளுமன்றத்தில் வரவு - செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பு காரணமாக
பிற்போடப்பட்டது.