சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஓர் முயற்சி
யாழ். மாவட்ட சதுரங்க சம்மேளனமானது மாவட்ட மட்டத்திலும், நாடளாவிய ரீதியிலும் பல போட்டிகளை இலங்கை சதுரங்க சம்மேளனத்துடனும் மற்றும் உலக தமிழர் சதுரங்க பேரவையுடனும் இணைந்து நடத்தி வருகிறது.
அதன் ஒரு முக்கிய போட்டியாக Northern chess primer league (NCPL) எனும் 7 பேர் கொண்ட 6 குழுக்களுக்கிடையிலான போட்டி நடத்தப்படவுள்ளது.
குறித்த போட்டியானது ஏப்ரல் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.
யாழ். மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் IBC tamil, லங்காசிறி மற்றும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் அனுசரணையில் இந்த போட்டி நடத்தப்படுகிறது.
சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படுகிறது.


இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
