வடகிழக்கு பருவப் பெயர்ச்சி தொடர்பில் முல்லைத்தீவில் விசேட கலந்துரையாடல்(Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தில் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையை எதிர்கொள்வது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன்தலைமையில் இன்று (01.11.2023) குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் வெள்ளப்பெருக்கு, சூறாவளி, டெங்கு முதலான அனர்த்தங்களை எவ்வாறு தடுப்பது என்பது தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அனர்த்தங்களை எதிர்கொள்ளும் முறைகள்
இதன்போது வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையினால் உண்டாகும் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் முறைகள் மற்றும் அவற்றை குறைப்பதற்கான திட்டமிடல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையால் ஏற்படும் பாதிப்புக்களை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்கள் தொடர்பாகவும், அனர்த்தங்களின் போது மக்களை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய முன்னாயத்த நடவடிக்கைகள்,வீதிப்போக்குவரத்து மற்றும் வீதி விபத்து, பாடசாலை மற்றும் வைத்தியசாலைகளில் அனர்த்த குறைப்பு செயற்றிட்டம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன.






பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
