2024 ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு போட்டி: முல்லைத்தீவு மாவட்டம் 2ஆம் இடம்
2024 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு போட்டியின் அனைத்து விளையாட்டிலும் அடிப்படையில் தொடர்ந்தும் 4 ஆவது தடவையாகவும் யாழ்பாணத்திற்க்கு அடுத்த நிலையாக 2ஆம் நிலையை முல்லைத்தீவு மாவட்டம் தொடர்ந்தும் தமதாக்கியுள்ளது.
கடந்த சனி மற்றும் ஞாயிறு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவின் முடிவுற்ற அனைத்து போட்டிகளின் இறுதி நிகழ்வு மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றுள்ளது.
மெய்வல்லுனர் போட்டிகள்
இந்நிகழ்வின் வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுதுறை அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறைஞ்சன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்வின் 2024 ஆம் ஆண்டுக்கான அனைத்து விளையாட்டுகள் அடங்கியதாக மாகாணங்களின் மாவட்டங்களின் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் மாவட்டங்கள் விளையாட்டுகளில் பெற்ற மொத்த பதக்க அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டம் வடக்கின் தொடர்ந்தும் 4 தடவையாக 2ஆம் நிலையினை தமதாக்கியுள்ளது.
வடமாகாண 2024 விளையாட்டு விழாவின் முடிவடைந்த அனைத்து தனி குழு போட்டிகளின் அடிப்படையில் மாவட்டங்களின் நிலைகளும் பெற்ற பதக்கங்களும் பின்வருமாறு,
1ஆம் இடம் யாழ்பாண மாவட்டம் - தங்கம்119 வெள்ளி77 வெண்கலம்83
2ஆம் இடம் முல்லைத்தீவு மாவட்டம் - தங்கம்46 வௌ்ளி40 வெண்கலம்37
3ஆம் இடம் கிளிநெச்சி மாவட்டம் - தங்கம்28 வெள்ளி48 வெண்கலம்39
4ஆம் இடம் வவுனியா மாவட்டம் - தங்கம்20 வௌ்ளி33 வெண்கலம்36
5ஆம் இடம் மன்னார் மாவட்டம் - தங்கம்16 வெள்ளி22 வெண்கலம்28