உக்ரைனிடம் சிக்கிய வடகொரிய வீரர்கள்: ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள தகவல்
ரஷ்யாவில் (Russia) தமது கட்டுப்பாட்டுக்குள் உள்ள குர்ஸ்க் பகுதியில் 2 வடகொரிய வீரர்களை உக்ரைனின் (Ukraine) பாதுகாப்புப் படையினர் கைது செய்திருப்பதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
மேலும், "குர்ஸ்க் பகுதியில் வடகொரிய இராணுவ வீரர்களை நமது வீரர்கள் சிறைபிடித்துள்ளனர். காயமடைந்த 2 வீரர்கள், கீவ்வுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் உள்ளனர்.
போர்க்கைதிகள்
இது எளிதான காரியமல்ல. உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியாவின் ஈடுபாட்டிற்கான எந்த ஆதாரத்தையும் விட்டு வைக்காமல் அழிக்க களத்தில் சண்டையிட்டு காயமடைந்த வடகொரிய வீரர்களை அவர்களே கொலை செய்வார்கள்.
இதை முறியடித்து 2 வடகொரிய வீரர்களை எங்கள் படை சிறைபிடித்துள்ளது பாராட்டத்தக்கது. அனைத்து போர்க்கைதிகளையும் போலவே, இந்த 2 வடகொரிய வீரர்களும் தேவையான மருத்துவ உதவியைப் பெறுகிறார்கள்.
Our soldiers have captured North Korean military personnel in the Kursk region. Two soldiers, though wounded, survived and were transported to Kyiv, where they are now communicating with the Security Service of Ukraine.
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) January 11, 2025
This was not an easy task: Russian forces and other North… pic.twitter.com/5J0hqbarP6
இந்தக் கைதிகளை பத்திரிகையாளர்கள் அணுக அனுமதிக்குமாறு படையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். என்ன நடக்கிறது என்பது பற்றிய உண்மையை உலகம் அறிய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |