எந்தப் போருக்கும் தயார்! தீவிரப்படுத்தப்படும் இராணுவப் பயிற்சி:வட கொரியா பகிரங்க அறிவிப்பு
வட கொரியா, தனது ஆயுதப் படைகள் எந்தப் போருக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவதாகவும் தீவிரப்படுத்துவதாகவும் கூறியுள்ளதாக அரச ஊடகமான அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செயற்கைக்கோள் படங்கள்
வடகொரிய தலைவர் தலைவர் கிம் ஜோங் உன் தலைமையில் நேற்று (06.02.2023) நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய இராணுவ ஆணையக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வணிக ரீதியான செயற்கைக்கோள் படங்கள் வட கொரியப் படைகள் பியாங்யாங்கில் பயிற்சியில் ஈடுபடுவதைக் காட்டுகின்றன.
தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்களின் செய்தித் தொடர்பாளர் லீ சுங்-ஜுன், தென் கொரிய இராணுவம் அணிவகுப்பு ஒத்திகை தொடர்பான பகுதிகளில் பணியாளர்கள் மற்றும் வாகனங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதைக் கண்டறிந்துள்ளது என கூறியுள்ளார்.
ஆனால், இது எப்போது என்பது குறித்த மதிப்பீட்டைப் பகிர்ந்துக்கொள்ள அவர் மறுத்துவிட்டார்.
ஆய்வாளர்கள் கருத்து
ஏவுகணைகள் தொடர்பான புதிய இராணுவ பணியகத்தை வட கொரியா உருவாக்குவது தொடர்பான முன்னேற்றங்களை தென் கொரிய இராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய துறை, அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் அமைப்புகளின் வளர்ச்சியைக் கையாளக்கூடும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வடகொரியா தனது ஆயுதப்படைகளை நிறுவியதன் 75வது ஆண்டு விழாவை பெப்ரவரி 8ஆம்
திகதியும், பெப்ரவரி 16ஆம் திகதி ஒளிரும் நட்சத்திரத்தின் நாளையும்
கொண்டாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
