தென் கொரிய எல்லையில் வீழ்ந்த வட கொரிய ஏவுகணை! அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வட கொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று தென் கொரிய கடற்பகுதியில் வீழ்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 அதி சக்தி வாய்ந்த ஏவுகணைகள்
பல்வேறு மாதிரிகளை கொண்ட 10 அதி சக்தி வாய்ந்த ஏவுகணைகளை சோதனை செய்ய வடகொரியா நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஏவுகணைகள் நாட்டில் கிழக்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் சோதனை செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரியா 1953 ஆம் ஆண்டு இரு நாடுகளாக பிரிக்கப்பட்ட பின்னர், இவ்வாறு கடல் எல்லைப் பகுதியை ஏவுகணையொன்று கடந்து சென்றமை இதுவே முதலர் தடவையாகும் என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது,
தென் கொரியா கண்டனம்
தென் கொரியாவின் கிழக்கு கரையோரப் பகுதிக்கும் உலேயுனங்கோடா தீவுக்கும் அருகில் உள்ள கடற்பகுதியில் இந்த ஏவுகணை வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவின் இந்த ஏவுகணை தொடர்பில் தென் கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வட கொரியாவின் ஏவுகணைகள் ஏவப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்கும் கடல் எல்லைப் பகுதிக்கு அருகில் வானிலிருந்து 3 ஏவுகணைகளை தான் ஏவியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வட கொரியா கடும் கண்டனம்
தென் கொரியாவும், அமெரிக்காவும் கொரிய கடற்பகுதியில் கூட்டாக ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளன. இதற்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து கண்டன அறிக்கையை வட கொரியா வெளியிட்டது.
அதில், “அமெரிக்காவும் தென் கொரியாவும் வட கொரியாவுக்கு எதிராக ஆயுதப் படைகளைப் பயன்படுத்த முயற்சித்தால், வட கொரியா இதற்கான எதிர்வினையை தாமதிக்காமல் செய்யும். வரலாற்றில் மிக மோசமான விலையை அமெரிக்காவும், தென் கொரியாவும் கொடுக்க நேரிடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த ஏவுகணை பரிசோதனையை வட கொரியா நடத்தியுள்ளது.
வட கொரியாவின் இந்த நடவடிக்கையை அத்துமீறல் என்று ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வட கொரியா இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
