பதற்றத்திற்கு மத்தியில் புதிய ஏவுகணையை பரிசீலித்த வடகொரியா! குழப்பத்தில் உலக நாடுகள்
வடகொரியா இன்று பலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏவுகணை ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏவுகணை கடலில் வீழ்ந்துவிட்டதாகவும், அது ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக நம்பப்படுவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
அணு ஆயுதம் ஏந்திய முதல் ஏவுகணை
ஜனவரி 27 அன்று இரண்டு பலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா ஏவியதன் பின்னர் , அணு ஆயுதம் ஏந்திய வடகொரியாவின் முதல் ஏவுகணை இதுவாகும்.

அமெரிக்காவும் தென் கொரியாவும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், வட கொரியா கடலில் ஏவுகணையை ஏவியதாக கூறப்படுகிறது.
ஐந்து நாட்களுக்கு முன்பு தென் கொரியாவும் அமெரிக்காவும் தொடங்கிய பாரிய இராணுவப் பயிற்சிகள் முற்றிலும் தற்காப்பு மற்றும் வட கொரியாவின் இராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை சோதிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை என்று இரு நாடுகளும் வலியுறுத்தியிருந்தன.
மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென எச்சரிக்கை
இந்த பயிற்சியானது தமது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை என வடகொரியா தொடர்ந்து சாடி வருகிறது.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி கிம் யோ ஜொங், இந்தப் பயிற்சிகளுக்கு எதிராக "கற்பனை செய்ய முடியாத மோசமான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 17 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam