மீண்டும் ஏவுகணை சோதனை! ரஷ்யாவுக்கான ஆயுத ஏற்றுமதிக்கு திட்டமிடும் வட கொரியா
வட கொரியாவானது மீண்டும் பல்வேறு வகையான குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய இராணுவம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென் கொரிய முப்படை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“வட கொரியாவின் கிழக்கு துறைமுக நகரமான வோன்சன் பகுதியிலிருந்து வியாழக்கிழமை காலை 8.10 முதல் 9.20 மணி வரை பல ஏவுகணைகள் ஏவி சோதிக்கப்பட்டன.
உக்ரைன் போர்
இந்த ஏவுகணைகளில் ஒன்று அதிகபட்சமாக 800 கி.மீ. தொலைவு பாய்ந்து கடலில் விழுந்தது. இந்தச் சோதனைகளுக்கும், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு வட கொரியா ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கும் தொடா்பு இருக்கின்றதா என்று ஆய்வு செய்யப்படுகிறது.
ரஷ்யாவின் இஸ்காண்டா் ஏவுகணையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளின் செயல்திறனைச் சோதிக்க இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாா்ச் 10-ஆம் திகதிக்குப் பிறகு ஏவுகணை சோதனையில் வட கொரியா ஈடுபட்டுள்ளது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |