போர் முடிந்த கையோடு பல அமைப்புக்கள் உதவிகளை குறைத்துள்ளது: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு
போர் முடிந்த கையோடு பல அமைப்புக்கள், நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தாலும் தற்போது நிலைமை அவ்வாறில்லை என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னி வாழ் மக்களுக்கான மனிதநேய நம்பிக்கை நிதியம், மெத்தா புனர்வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட 'வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்' வடக்கு மாகாண ஆளுநரால் இன்று (06) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உதவிகள்
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராக 2003ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதிலிருந்து மனிதநேயம் அமைப்பை தனக்கு நன்கு தெரியும்.

போருக்கு முன்னரும், போரின் பின்னரும் அந்த அமைப்பு இந்தப் பகுதி மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றது.கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கும் உதவிகளைச் செய்திருக்கின்றார்கள்.
இந்த நிறுவனத்தின் தலைவி கைலாசபிள்ளை அவர்கள் பல தடவை ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறுவார்.
நாங்கள் தொடர்ச்சியாக உதவிகளைச் செய்வதைவிட அவர்களை வலுப்படுத்தி சொந்தக் காலில் நிற்பதை உறுதி செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam