வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video)

Kilinochchi Mannar Vavuniya Sri Lankan protests
By Sudaron Jun 01, 2023 09:54 AM GMT
Report

வடக்கு, கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரின் ஏற்பாட்டில் ஓமான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்காக சென்று சிக்குண்டிருக்கும் பெண்களை நாட்டிற்கு திருப்பி கொண்டுவரக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கவனயீர்ப்பு போராட்மானது இன்று (01.06.2023) கிளிநொச்சி நகர புதிய பேருந்து நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் இணைப்பாளர் வாசுகி வல்லிபுரம் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெண்கள் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video) | North Eastern Women S Joint Organization

மேலதிக தகவல்-யது

வவுனியா

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கை அரசே வெளிநாடு வேலைக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய், அரச இலாபத்திற்காக பெண்களை விற்காதே, பெண்களை விலைக்கு வாங்காதே போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இறுதியில் அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான மகஜரை ஊடகங்களுக்கு வாசித்து காட்டியிருந்தனர்.

அதன் பிரதிகளை மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், அலி சப்ரி - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பொது முகாமையாளர் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் ஆகியவற்றிற்கு அனுப்பப்படவுள்ளது.

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video) | North Eastern Women S Joint Organization

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video) | North Eastern Women S Joint Organization

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video) | North Eastern Women S Joint Organization

மேலதிக தகவல்-யது

மன்னார்

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் - பஜார் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஓமான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இலங்கையில் இருந்து வேலை வாய்ப்புக்காக சென்று நாடு திரும்ப முடியாத நிலையில் சிக்கி தவிக்கும் பெண் தொழிலாளர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு திருப்பி கொண்டு வாருமாறும்,பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் மகஜரும் வெளியிட்டுள்ளனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மெசிடோ நிறுவன பணியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video) | North Eastern Women S Joint Organization

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video) | North Eastern Women S Joint Organization

மேலதிக தகவல்-சான்

திருகோணமலை

போலி முகவர்களால் ஏமாற்றப்பட்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பட்டு வெளிநாடுகளில் கஷ்டப்படும் இலங்கையர்களை உடனடியாக தாயகத்துக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்து வடக்குகிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் - வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியுலர் அலுவலகத்தின் முன்பாக இன்று (01.06.2023) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது  50 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குபற்றியிருந்துடன் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

அத்தோடு அரசாங்கமானது போலி வெளிநாட்டு முகவர்களை தடை செய்,பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்,நாட்டுக்கு வர தவிக்கும் பெண்களை வீட்டுக்கு அனுப்பு உள்ளிட்ட கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் நிறைவடைந்த பின்னர் வெளிநாட்டு அமைச்சின் திருகோணமலை பிராந்திய கொன்சியுலர் அலவலகத்திற்கு சென் பெண்கள் சிலர் அலுவலக கிளைத் தலைவர் கே.விக்னேஸ்வரானந்தன் அவர்களிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றினையும் கையளித்திருந்தனர். 

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video) | North Eastern Women S Joint Organization

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video) | North Eastern Women S Joint Organization

வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பின் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு(Video) | North Eastern Women S Joint Organization

மேலதிக தகவல் - பதுர்தீன் சியானா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 

மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US