லிபியாவில் ஆயுதக்குழுக்களிடையே மோதல்: அதிகரிக்கும் உயிரிழப்புகள்
வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடைபெறும் மோதலில் பலியானவா்களின் எண்ணிக்கை 45ஆக உயா்ந்துள்ளது.
லிபியா தலைநகா் திரிபோலியில் 444-ஆம் படைப் பிரிவைச் சோ்ந்தவா்களுக்கும், சிறப்பு தற்காப்புப் படையினருக்கும் இடையே கடந்த (15.08.2023) முதல் நடைபெற்று வரும் மோதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45-ஆக அதிகரித்துள்ளது.
இது தவிர, இந்த சண்டையில் சிக்கி 146 போ் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், உயிரிழந்தவா்களில் ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் எத்தனை போ், பொதுமக்கள் எத்தனை போ் என்ற விவரம் வெளியிடப்படப்படவில்லை.+
நேட்டோ படைகளின் உதவி
444-ஆம் படைப் பிரிவு தளபதி முகமது ஹம்ஸாவை சிறப்பு தற்காப்புப் படையினா் திரிபோலி விமான நிலையத்தில் கைது செய்ததாக தகவல் வெளியானதைத் தொடா்ந்து இரு குழுவினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
லிபியாவை 40 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டு வந்த அல்-கடாஃபியின் ஆட்சியை, அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் உதவியுடன் கிளா்ச்சிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு முறியடித்தனர்.
அதற்குப் பிறகு அந்த நாட்டில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் தங்களுக்குள் தொடா்ந்து சண்டையிட்டு வருகின்றன.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
