நுரைச்சோலை மின்நிலையம் மேலும் சில நாட்களுக்கு முடக்கம்! வெளியான அறிவிப்பு
நுரைச்சோலை மின்நிலையம் மேலும் சில நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நேற்று(17.10.2026) ஏற்பட்ட திடீர் மின்சார விநியோகத் தடையை தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளின்படி நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் தேசிய மின்வழங்கல் கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது.
தேவையான நடைமுறைகள் முடிவடையும் வரை, அது மேலும் சில நாட்களுக்கு மீண்டும் இணைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்மின் உற்பத்தி
இதன் மூலம் 810 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிகமாக இழக்கப்படுவதால் நாட்டின் மின் விநியோகத்தில் கூடுதல் அழுத்தம் ஏற்படும்.

எனினும், தொடரும் மழைக்காலம் காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகபட்ச அளவில் முன்னெடுக்கப்படுவதாலும், மின்சார தேவையின் வீழ்ச்சி காரணமாகவும் மின் அமைப்பின் மீதான அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று ஏற்பட்ட நாடு தழுவிய மின்முடக்கத்திற்கான சரியான காரணம் மற்றும் நிகழ்வுகளை கண்டறிய உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.