உயர் மட்ட தலைவர்கள் எவரும் நாட்டில் இருந்து தப்பிச் செல்லவில்லை:பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் மட்ட தலைவர்கள் எவரும் நாட்டில் இருந்து வெளியேறவில்லை என அந்த கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தலைவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகளில் எந்த உண்மையுமில்லை என அந்த கட்சி கூறியுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச உட்பட உயர் மட்ட தலைவர்கள் அனைவரும் நாட்டில் தொடர்ந்தும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாகவும் அந்த கட்சி மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக அரசியல்வாதிகள் தப்பியோட முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய தலைவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி இருந்தன.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri