சிங்கப்பூரில் கடவுச்சீட்டு அல்லாத விமான பயணத்திற்கு அனுமதி
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் அடுத்த வருடம் முதல், கடவுச்சீட்டு அல்லாத தானியங்கி விமான பயணங்களுக்கான அனுமதி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது முகத்தை அடையாளம் காணுதல் உள்ளிட்ட பயோமெட்ரிக் தரவுகளை மட்டுமே பயன்படுத்தி, கடவுச்சீட்டு அல்லாமல் உள்ளூர் விமான பயணங்களுக்காக பயணிகளை அனுமதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, கடவுச்சீட்டு இல்லாத குடிப்பெயர்வு அனுமதியை அறிமுகப்படுத்தும் உலகின் முதல் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகுமென அந்த நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் ஜோசபின் தியோ அறிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு
இதற்காக நாட்டின் குடிவரவு சட்டத்தில் பல திருத்தங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சிங்கப்பூரில் இருந்து வெளியே பல நாடுகளுக்கு செல்வதற்கு கடவுச்சீட்டு தேவைப்படும் எனவும் அதற்கான இலவச கடவுச்சீட்டு அனுமதி வழங்கபடவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் சிறந்த விமான நிலையம் மற்றும் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகளில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையமும் ஒன்றாகும்.
இந்த விமான நிலையம் ஊடாக 100 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் ஹாங்காங் சர்வதேச விமான நிலையம், டோக்கியோ நரிடா, டோக்கியோ ஹனேடா, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி, லண்டன் ஹீத்ரோ மற்றும் பாரிஸ் சார்லஸ் டி கோல் போன்ற விமான நிலையங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
