நாமினி விஜயதாசவிற்கு அமெரிக்காவின் உயரிய விருது
இலங்கையின் பெண்பத்திரிகையாளர் நாமினி விஜயதாச புலனாய்வு இதழியலிற்கு ஆற்றிவரும் பெரும் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க இராஜாங்க செயலாளரின் சர்வதேசதுணிச்சலான பெண் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஊழலை அம்பலப்படுத்தவதற்கான அவரது தளர்ச்சியற்ற அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையில் வெளிப்படைதன்மையை பரப்புரை செய்தல் என்பவற்றிற்காக குறித்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களிற்கு மேலாக பத்திரிகையாளராக பணிபுரியும் நாமினி விஜயதாச தனது செய்தி அறிக்கையிடவில் துணிச்சலையும் நேர்மையையும் வெளிப்படுத்திவந்துள்ளார்.
We’re proud to announce that Sri Lankan journalist Namini Wijedasa will be honored alongside 7 remarkable women at the 19th annual International Women of Courage Awards that recognizes women from around the world who have demonstrated exceptional courage, strength, & leadership –…
— Ambassador Julie Chung (@USAmbSL) March 29, 2025
உள்நாட்டு யுத்தத்தின் பாதிப்பு
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மனித பாதிப்புகளை பதிவு செய்வதன் மூலம் தனது பத்திரிகையாளர் பணியை ஆரம்பித்த அவர்யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான குரலாக விளங்கினார்.
அவரது புலனாய்வு பணி அரசாங்கத்தின் முறைகேடுகள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிச்சம்போட்டுக்காட்டியது, தனிப்பட்ட ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அவர் அந்த பணியை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
