கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமருக்கான பெயர்கள் பரிந்துரை
இலங்கையின் அரசியல் கட்சிகள் இணைந்து எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள சர்வ கட்சி அரசாங்கம் தொடர்பில் உடன்படிக்கையை தயாரித்து வருவதாக ஐக்கிய பிரஜைகள் ஒன்றியத்தின் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அந்த வகையில்,சர்வகட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்க மற்றும் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வு
இதற்கமைய, இடைக்கால அரசை அமைப்பதா அல்லது வேறு ஆட்சி முறையை அமைப்பதா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பட்டுள்ளார்.
எனினும், அந்த நிர்வாகத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து நீண்ட காலமாக ஆராயப்பட்டு வருவதாகவும், புதிய அரசை நடத்துவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri