சட்டத்திற்கு புறம்பாக ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவில்லை
சட்டத்திற்கு புறம்பான வகையில் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மேல் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய தண்டனை விதிக்கப்பட்ட அதுல திலகரட்ன என்பவருக்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு தனிப்பட்ட ஒரு நபரை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 12ம் திகதி வெசாக் பௌர்ணமி தினமன்று சில கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
பொது மன்னிப்பு வழங்கப்படும் நிபந்தனைகளுக்கு புறம்பான வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் தகுதியற்ற கைதி ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியிட்டு வரும் தகவல்களில் உண்மையில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
