சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: சிறீதரன் வெளியிட்ட அறிவிப்பு (Video)
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (09.04.2023) முன்பு அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மலையாளபுரம் கிராம மக்களுடனான கலந்துரையாடல் ஒன்று மலையாளபுரம் கிராம அபிவிருத்தி சங்க வளாகத்தில் நேற்று (04.09.2023) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலைத்தொடர்ந்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சர் ஹெகேலிய ரம்புக்வெலவுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா அல்லது வாக்களிப்பிலிருந்து விலகியிருப்பதா என்ற நிலைப்பாட்டை நாளை (05.09.2023) நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடும் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து முடிவெடுக்கவுள்ளனர்.
இன்று வைத்தியசாலைகளின் சாதாரண நீரிழிவு நோயாளருக்கு கூட மருந்து இல்லாத நிலை வைத்தியசாலைகளில் பாரிய மருந்து நெருக்கடி நிலவுகிறது. மருந்துகளை நோயாளர்கள் வெளியில் வாங்க வேண்டிய நிலையுள்ளது.
பல வைத்தியசாலைகள் இயங்கு நிலையற்று காணப்படுகிறது.
இலங்கையின் சுகாதார துறை பாரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. இதனை உள்வாங்கியிருக்கிறோம் . பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற ரீதியில் கலந்தாலோசித்து வெள்ளிக்கிழமைக்கிடையில் முடிவை அறிவிப்போம் என தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் கையெழுத்து ஆவனத்தில் ஒப்பமிடும் நிகழ்வு
சுகாதார சேவை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் தற்போதைய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் 10 இலட்சம் கையெழுத்து ஆவனத்தில் ஒப்பமிடும் நிகழ்வு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரமுக்வெல்லவிற்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேணையை முன்வைப்பதற்கு ஆதரவாக சுமார் 300ற்கும் அதிகமான மக்கள் கையெழுத்து ஆவனத்தில் ஒப்பமிட்டனர்.
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி முன்னால் புத்தளம் நகரசபை தலைவர் எம்.எஸ்.எம் ரபீக் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


















10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
