சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை வழங்க முடியாது – டொக்டர் சமந்த ஆனந்த
சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்க முடியாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.
கொவிட் நோய்த் தொற்று பரவி வரும் நிலையில் அரசாங்க அதிகாரிகள், தனியார் துறையினர், சுற்றுலாப் பயணிகள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியான சட்டங்களை அமுல்படுத்தக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யுக்ரேய்னிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்தமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
கொவிட் கட்டுப்பாடு குறித்த சுகாதார விதிமுறைகள் அனைவருக்கும் ஒரே விதமாகவே இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாறாக ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமாக இந்த விதிமுறைகளை அமுல்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார விதிமுறைகளை வழங்க வேண்டிய கடப்பாடு சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் பொறுப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் கட்டுப்பாடு தொடர்பில் சுற்றுலாப் பயணிகளுக்கு தனியான சட்டங்களை அமுல்படுத்த முடியாது என டொக்டர் ஆனந்த தெரிவித்துள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri