“லிற்றோ“ எரிவாயுவின் தர நிர்ணயம் குறித்து நீதிமன்றில் வெளியிடப்பட்ட உண்மை தகவல்
இலங்கையில் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டு வரும் லிற்றோ நிறுவனத்தின் எரிவாயுவுக்கு தர நிர்ணயம் இல்லை என்று நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.
லிற்றோ நிறுவனம் சார்பில் இன்று மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, ஹர்ஸ அமரசேகர இதனை தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற வகையில் எாிவாயுவை சந்தைப்படுத்திமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு தாக்கல் செய்த மனுவின் விசாரணை இடம்பெற்றபோதே லிற்றோ நிறுவன சட்டத்தரணி இதனை கூறினார்
எனினும் இனி வரும் காலத்தில் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் பரிந்துரையின்கீழ் எாிவாயு கொள்கலன்களில் “புரொப்பேன் மற்றும் பியூட்டேன்” கலவைகளின் விகிதங்களை காட்சிப்படுத்துவதற்கு லிற்றோ நிறுவனம் இன்று நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
இதற்கிடையில் பாதுகாப்பற்ற வகையில் எாிவாயுவை விநியோகித்தமைக்கு எதிராக, குற்றப்புலனாய்வுத்துறையினர், அமைச்சர் பந்துல குணவர்த்தன, ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தவேண்டும் என்று மனுதாரரான நாகானந்த கோரியுள்ளார்.
இந்தநிலையில் மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் மனுவுக்கு சார்பான சமர்ப்பணங்களுக்காக நாளை வரை விசாரணையை ஒத்திவைத்தது.