தபால் பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தபால் திணைக்களப் பணிளாாகளுக்கு ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால் மா அதிபர் ருவான் சத்குமார இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாதாந்த சம்பளம் தேவை என்றால் உடன் பணிக்கு திரும்புமாறு தபால் மா அதிபர் எழுத்து மூலம் பணியாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கங்களுக்கும் இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக 140 மில்லியன் ரூபா நட்டம் இதுவரையில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
போராட்டம் முன்னெடுக்கப்படும் வரையில் சம்பளத்திற்கான நிதி ஓதுக்கீடு மேற்கொளள்ப்படாது என திறைசேரி அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பணியில் ஈடுபடுவோருக்கு மட்டும் சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் சத்குமார தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்




