தனிமைப்படுத்தல் தொடர்பில் பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஆபத்தான பட்டியல் நாடுகலிருந்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்துக்கு வரும்போது தனிமைப்படுத்த வேண்டியதில்லை.
அந்நாட்டு அரசாங்கம் இதனை தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் எதிர்வரும் திங்களன்று 04:00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இங்கிலாந்தில் கோவிட் தடுப்பூசிகளை பெற்றவர்கள் மட்டுமே பிரான்ஸைத் தவிர, ஆபத்தான பட்டியல் நாடுகளிலிருந்து வரும்போது தனிமைப்படுத்தலைத் தவிர்க்க முடியும்.
இந்த கட்டுப்பாடு மாற்றம் குடும்பத்தினரையும், நண்பர்களையும் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களையும் மீண்டும் ஒன்றிணைக்க உதவும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை முழுமையாக செலுத்திக்கொண்டவர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தும் என போக்குவரத்துச் செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.
பயணிகள் புறப்படுவதற்கு முன்னரும், வந்தபின் இரண்டாவது நாளிலும் பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 18 வயதிற்குட்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு பெறுவார்கள்.
ஆபத்தான பட்டியலில் உள்ள பிரான்சுக்கு கடுமையான விதிகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும், பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், அவர்கள் திரும்பி வரும்போது தனிமைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண விதிகளின் மதிப்பீட்டின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை அடுத்த வார இறுதியில் மதிப்பாய்வு செய்யப்படும் என்று கிராண்ட் ஷாப்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri