ஊடகங்கள் சொல்லும் அளவிற்கு பிரச்சினை இல்லை: டக்ளஸ் தேவானந்தா
ஊடகங்கள் மக்களுக்குத் தவறான வழிகளை வெளிப்படுத்துவதாகத்தான் என்னால் உணரக்கூடியவாறு உள்ளது. ஊடகங்கள் சொல்லும் அளவிற்குப் பிரச்சினை இல்லை. பிரச்சினை எல்லாம் ஊதிப் பெருப்பிக்கப்படுவதாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது எனக் கடல் தொழிலமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மாமடுச்சந்தி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தின் அறநெறி பாடசாலையின் ஆண்டு நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அறநெறி பாடசாலை பிள்ளைகள் தங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்கள் பாராட்டக்கூடியது. அதனை ஊக்குவித்தவர்களுக்கும் பாராட்டினையும் வாழ்த்துக்களையும் சொல்லி வைக்கின்றேன். கடந்த 2004 ஆம் ஆண்டு என்னைச் சந்தித்தவர்களிடம், இந்த அழிவு யுத்தத்தினை நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு வருமாறு தான் நான் பல தடவைகள் சொல்லியுள்ளேன்.
எங்களுக்கு ஒரு காலகட்டத்தில் ஆயுத போராட்டத்திற்குரிய தேவை ஏற்பட்டிருந்தது உண்மைதான். ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் 1987 ஆம் ஆண்டுடன் நாங்கள் அதற்கு முற்றுப்புள்ளி கண்டிருக்க வேண்டும்.
சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது போல தங்கள் சுயலாபத்திற்காக மக்களைத் தவறாக வழிநடத்தி அவர்களைப் பலிகொடுத்தது மாத்திரமல்ல ஈடு வைக்கின்ற செயல்களையும் செய்து விட்டுப்போய்விட்டார்கள். தொடர்ந்து இருக்கின்றவர்கள் அதனை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
நீங்கள் சரியானவர்களைத் தெரிவு செய்யுங்கள், அப்போதுதான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கடந்த காலங்களிலும் சொல்லியுள்ளேன். முன்னேறலாம் என்பது அடிமைத்தனமான வாழ்க்கையல்ல கௌரவமான வாழ்க்கையுடன் இன்று நாங்கள் அப்படித்தான் இருக்கின்றோம்.
இந்த அழிவு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் எங்கள் கௌரவத்தில் ஏதாவது மாசு படவில்லை என்று நான் நினைக்கின்றேன். அப்படி இருக்குமாக இருந்தால் நீங்கள் என்னிடம் சொல்லாம். இன்று இருக்கின்ற கௌரவமான நிலைமையினை பாதுகாத்து நாங்கள் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.
அப்படியான நிலைமைக்கு நாங்கள் செல்ல வேண்டுமாக இருந்தால் சரியாக நீங்கள் அடையாம் கண்டு உங்கள் பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யவேண்டும். இன்று நீங்கள் பல பிரச்சினைகளை முன்வைத்துள்ளீர்கள். இந்த பிரச்சினைகள் எனக்குத் தெரியும்.
போர்க் காலத்தில் தீர்க்கமுடியாது ஏன் என்றால் அப்போது கோவில்களுக்குப் பணம் கேட்கும் போது என்னால் முடிந்த அளவிற்கு நான் கொடுத்தோன். ஆனால் எனக்கு தெரியும் அந்த முழுக்காசும் கோவில்களுக்குப் போயிருக்காது, அன்று யார் இங்கு நாட்டாமை செய்துகொண்டிருந்தார்களோ அவர்களுக்குத்தான் அதில் பெருந்தொகை பணம் போயிருக்கும்.
இப்போதைக்கு தேர்தல் ஒன்றும் வரப்போவதில்லை, நீங்கள் முன்னேற வேண்டுமாக இருந்தால் உங்கள் கௌரவத்தினை பாதுகாத்து மேலும் வலுப்படுத்த வேண்டுமாக இருந்தால் நீங்கள் சரியானவர்களைத் தெரிவு செய்திருக்கவேண்டும்.
நீங்கள் தெரிவு செய்யவில்லை. இந்த மாவட்டத்திற்கு அரசாங்கம் நிறைய நிதிகளை ஒதுக்கியுள்ளது. எங்களின் அரசாங்கம் எந்த வகையிலும் பாரபட்சம் அற்ற வகையில் அந்தந்த பிரதேசங்களுக்குத் தேவையான நிதிகளை ஒதுக்கியுள்ளது.
நாங்கள் 80களில் ஆயுதம் தூக்கியபோது அன்று இருந்த ஆட்சியாளர்கள் ஒரு பாராபட்சமாக அல்லது மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அல்லது இன ரீதியாகத்தான் அணுகினார்கள். ஆனால் இன்று உள்ள அரசாங்கம் அப்படி அல்ல நானும் அரசின் மூத்த அமைச்சராக இருக்கின்றேன்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வழிகாட்டலில் இந்த அரசாங்கம் முன்னோக்கிச் செல்கின்றது. ஆனால் ஊடகங்கள் மக்களுக்குத் தவறான வழிகளை வெளிப்படுத்துவதாகத்தான் என்னால் உணரக்கூடியவாறு உள்ளது. ஊடகங்கள் சொல்லும் அளவிற்குப் பிரச்சினை இல்லை. பிரச்சினை எல்லாம் ஊதிப் பெருப்பிக்கப்படுவதாகத்தான் என்னால் பார்க்கப்படுகின்றது.
எனவே மக்களின் பிரச்சினைகள் ஒன்று ஒன்றரை ஆண்டுகளுக்குள் தீர்த்து விடுவோம். நாங்கள் ஆட்சியினை பொறுப்பெடுக்கும் போது கடந்த கால ஆட்சியாளர்கள் கஜானவை திறை சேரியினை காலி பண்ணிவிட்டுத்தான் எங்களுக்குக் கொடுத்தார்கள்.
அதில் ஒன்று இந்த வீட்டுத்திட்டம். அந்த வீட்டுத்திட்டத்திற்கு அன்றைய அரசாங்கம் அமைச்சரவை அனுமதி கொடுத்தது இருக்கின்ற காசிற்குள் செய்யச்சொல்லி ஆனால் அன்று இருந்த அமைச்சர் என்ன செய்தார்? அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டிபோட இருக்கின்ற படியால் ஒருவீட்டிற்கு பத்து இலட்சம் என்று சொன்னால் ஒருவீட்டிற்கு ஐம்பதாயிரம் கொடுத்து வாக்குகளை அபகரிப்பதுதான் அருடைய நோக்கமாக இருந்தது. மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் நோக்கம் இருக்கவில்லை.
அன்பான மக்களே வருகின்ற மூன்று நான்கு மாதங்களுக்குள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமத்துடன் கலந்துரையாடல் என்றவகையில் பொறுப்பாக இருப்பவர்களுக்கு அரசாங்கம் வழிகாட்டியுள்ளது. அந்தந்த கிராமங்களுடன் கதைத்து அவர்களின் கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று சொல்லியுள்ளது.
பிரதேச சபைக்குக் கூட
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமத்துடனான இந்த அரசங்கத்தின் கொள்கை வேலைத்திட்டத்திற்கு அமைவாகக்
கிராமத்தோடு உரையாடி நீங்கள் முன்வைத்துள்ள பல பிரச்சினைகளை விரைவாகத்
தீர்க்கமுடியும் என தெரிவித்துள்ளார்.

காவேரியின் கர்ப்பத்தை விஜய் அறியும் உணர்வு பூர்வமான தருணம்.. மகாநதி சீரியல் எமோஷ்னல் புரொமோ Cineulagam

புதிய சீரியலில் நாயகனாக நடிக்கும் முத்தழகு சீரியல் நடிகர்.. யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
