காடுகளை வெட்ட அனுமதி வழங்கவில்லை - ஜனாதிபதி
காடுகளை வெட்ட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிராமத்துடன் உரையாடல் நிகழ்ச்சி திட்டத்தின் 11வது கட்டம் புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று நடைபெற்றதுடன் அதில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சி திட்டத்திற்கு எதிராக பலர் இருக்கின்றனர். அவர்களுக்கு இதில் உள்ள தவறான பக்கங்கள் மாத்திரமே தெரிக்கின்றன. நாட்டின் அரச தலைவர் சென்று மக்களை சந்தித்து உரையாடும் போது அவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போகும் என்ற அச்சம் இருக்கலாம். அச்சும் போது தொடர்ந்தும் அதனை செய்து அச்சமூட்ட வேண்டும்.
அதுதான் வழிமுறை. அத்துடன் நான் கூறுவதை தவறாக அர்த்தப்படுத்துகின்றனர். நான் சென்ற அனைத்து இடங்களிலும் காணி பிரச்சினைகள் பற்றி கூறினார்கள்.
பாரம்பரிய விவசாய நிலங்களை வன பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் என்பன ஏதோ ஒரு குறைப்பாடு காரணமாக எல்லைகளை வரையறுத்து பாரம்பரிய விவசாய நிலங்களை கைப்பற்றியுள்ளன.
இதனை அனைத்து இடங்களிலும் கூறினார்கள். இதனால், விவசாயம் செய்த காணிகளில் விவசாயம் செய்ய இடமளிக்குமாறு நான் கூறினேன். இதனை ஏன் புரிந்துக்கொள்ள இருக்கின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை.
காடுகளுக்கு சென்று காடுகளை அழிக்க அனுமதி வழங்கவில்லையே. காடுகள் அழிக்கப்படுமாயின் அதிகாரிகள் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
தாம் விவசாயம் செய்த காணிகளை கூகுள் வரைப்படம் மூலம் பார்த்து அடையாளப்படுத்தினால், தவறு நடக்கக் கூடும். பொய் பிரசாரங்களை செய்து இதனை சீர்குலைக்க சமூக ஊடகங்களில் காத்துக்கொண்டிருக்கின்றனர் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 14 மணி நேரம் முன்

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
