ஓய்வூதியம் தொடர்பில் ஜனாதிபதி அநுர அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி சிறப்புரிமைகள் சட்டம் திருத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
ஓய்வூதியம்
அந்த சட்டமூலத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 1 மில்லியன் ரூபாய் காப்பீட்டு இழப்பீட்டை 25 இலட்சமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனக்கு இனி நாடாளுமன்ற ஓய்வூதியம் தேவையில்லை என இன்று கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

வீட்டிலும், சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பிலும் வெற்றி வசந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்... வீடியோ இதோ Cineulagam

Post Office -ன் 2 வருட சூப்பர் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீட்டுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
