சீனாவின் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவியது எப்படி?
சீனாவின் சேதனப்பசளையை ஏற்றிய கப்பல், எவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவியது என்பது ஆச்சரியமாக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சீனாவின் சேதனப்பசளையை ஏற்றிய கப்பல், எவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவியது என்பது ஆச்சரியமாக உள்ளது. அது எவ்வாறு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்தது?
இந்தநிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட எவரையும் ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது. புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி, தீவிர சோசலிசம், தீவிர பழமைவாதம் அல்லது புதிய தாராளவாதமாக இருப்பதை விட நடுத்தர பாதையை தழுவிய ஒரு கட்சி என கூறியுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri