ரஞ்சனுக்கு வழங்கிய தண்டனையை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை! சரத்
நீதிமன்றத்தை அவமதித்ததற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை இதுபோன்ற குற்றத்திற்கு தண்டனை விதிக்க எந்தவொரு சட்ட விதிகளும் நாட்டில் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்புக்கு இலங்கையின் சட்டத்தில் எந்த தண்டனையும் கூறப்படவில்லை என்று பொன்சேகா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இன்று குறிப்பிட்டார்.
அத்தகைய சூழ்நிலையில் ரஞ்சனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஒருவரும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் உலகளாவிய ரீதியில் சட்டங்கள் வேறுபட்டவையாக உள்ளன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணி ஒருவருக்கு இந்தியாவில் ஒரு இந்திய ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இருப்பினும், அவர் அபராதம் செலுத்த மறுத்துவிட்டார். இதனையடுத்து அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார் என்று சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
உயில் எடுக்க வீட்டிற்குள் நுழைந்த காட்சியை எப்படியெல்லாம் எடுத்துள்ளார்கள் பாருங்க.. அய்யனார் துணை படப்பிடிப்பு வீடியோ Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam