தேசிய விளையாட்டு நிதியத்தில் பணம் இல்லை
தேசிய விளையாட்டு நிதியத்தில் பணம் இல்லையென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வெற்றி பெற்ற பல மாதங்களுக்குப் பிறகும், இலங்கையின் பராலிம்பிக் விளையாட்டு வீரர்கள் இன்னும் அதிகாரிகளால் வாக்குறுதியளிக்கப்பட்ட பரிசுத் தொகைக்காகக் காத்திருக்கிறார்கள் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பராலிம்பிக் விளையாட்டு வீரர்கள், உலக பராலிம்பிக் தடகள செம்பியன்சிப் பங்கேற்பாளர்கள், மல்யுத்த வீராங்கனை நெத்மி அஹின்சா பெர்னாண்டோ மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.
பணம் இல்லை
டோக்கியோவில் 2024 பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற, ஈட்டி எறிதல் வீராங்கனை சமிதா துலான் கொடித்துவக்கு, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற்ற உலக விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு விளையாட்டு வீரர்கள் தங்கள் ஊதியத்தைப் பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை முன்னாள் விளையாட்டு அமைச்சர்கள் நாமல் ராஜபக்ச மற்றும் தயாசிறி ஜெயசேகரா ஆகியோர் அண்மையில் நாடாளுமன்றத்தில் எழுப்பினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |