மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் இல்லை - கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி
மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் தனக்கு இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் தற்போதைய ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த இக்கட்டான நேரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக முக்கியப் பங்காற்றி வருவதாக கலாநிதி குமாரசுவாமி தெரிவித்தார்.
நிதி அமைச்சராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் மத்திய வங்கி ஆளுநரில் மாற்றம் ஏற்படலாம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதன்படி, தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு பதிலாக இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்படுவார் எனவும் அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த ஊடகம் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியிடம் கேள்வியெழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் தனக்கு இல்லையென குறிப்பிட்டுள்ளார்.