38 நாட்களாக காணாமல்போயுள்ள சிறுவர்கள்!பொதுமக்களிடம் உதவிகோரியுள்ள பொலிஸார்
திருகோணமலை - கொடதெனியாவ – வத்தேமுல்ல, பாந்துராகொட பிரதேசத்தில் காணாமல்போன இரு பாடசாலை மாணவர்கள் தொடர்பில் 38 நாட்களாகியும் எந்ந தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த நவம்பர் 23 ஆம் திகதி 10 மற்றும் 12 வயதுகளையுடைய சகோதரர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போன சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை ஊடகங்கள் மூலமாக பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை,சிறுவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071-8 592 867 அல்லது 071-8 592 868 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.





சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
