இறக்குமதிக்கு தடை விதிப்பது தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் விளக்கம்
இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கம் ஏதுமில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்ற தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், தேவையற்ற தேவையை உருவாக்கி, சில இறக்குமதிப் பொருட்களின் விலைகளை செயற்கையாக உயர்த்தும் சூழலை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இத்தகைய செயல்முறைகளை அனுமதிப்பதற்காக இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறக்குமதி கட்டுப்பாடு
இது உண்மையா அல்லது பொய்யா என்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆளுநர்,
“இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் அமெரிக்க டொலருக்கான தேவையை குறைப்பது போன்ற செயல்முறைகளில் ஈடுபடும் நோக்கம் ஏதுமில்லை” என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்காக முன்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து விரிவான கடன் வசதிகளைப் பெற்றிருக்கும் நிலையில் அத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது சாத்தியமில்லை.
அவ்வாறு நடந்தால் இரு தரப்பினருக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் திருத்தப்பட வேண்டியிருக்கும் என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan