இலங்கையில் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை: கிழக்கு மாகாண ஆளுநர்(Photos)
இலங்கையில் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை சில ஊடகங்கள் இதைப் பெரிதாகக் காட்டுவதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு தனியார் பேருந்து தரிப்பிட நிலையம் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட வீதி போக்குவரத்து அதிகார சபைக்கு பாரம் கொடுக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பின் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்குடன் மட்டக்களப்பு சுரேணா அதி சொகுசு பேருந்தைச் செலுத்திச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெறும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வின் அனுமதிப்பத்திரம் இல்லாமல் இயங்கும் பேருந்துகள் தொடர்பாகச் சாரதி நடத்துநர்கள் மகஜர் ஒன்றை கை அளித்ததுடன் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை சில ஊடகங்கள் இதை பெரிதாகக் காட்டுவதாகவும் ஊடகங்கள் இவ்வாறான விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
மக்களைக் குழப்புகின்ற நடவடிக்கையில் ஊடகங்கள் செயல்படக் கூடாது. கிழக்கு மாகாணம் ஒமிக்ரோன் தொற்றால் அதிகரித்துக் காணப்படுகின்றது.
தேவையான
தடுப்பூசிகள் கைவசம் உள்ள காரணத்தினால் அனைவரும் தடுப்பூசிகளைப் போட்டு சுகாதார
நடைமுறைகளைப் பேணி ஒமிக்ரோன் தாக்கத்திலிருந்து தாங்கள் தாங்களே தங்களைப்
பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





