இலங்கையின் தற்போதை உண்மை நிலவரத்தை பொது வெளியில் போட்டுடைத்த அமைச்சர்!
தற்போதைய நிலையில், மின்விநியோகம் தொடர்பிலான எந்தவிதஉத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“இன்றைய சூழ்நிலையில், பொது மக்களுக்கு தேசிய மின்விநியோக கட்டமைப்பு மீதான நம்பிக்கை குறைவடைந்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்படுமா அல்லது தடைப்படாத என்று மின்பாவனையாளர்கள் எண்ணும் நிலைமை உருவாகிவிட்டது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நடைமுறையில் செயற்படுத்த தவறியமையே தற்போதைய மின் விநியோக பிரச்சினைக்கு பிரதான காரணியாக உள்ளது.
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க தற்காலிக நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து மின்விநியோகம் சீராக வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது” என்றார்.
முன்னதாக இலங்கை முழுவதும் சுழற்சி அடிப்படையில், நான்கு கட்டங்களாக மின் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மின்தடை ஏற்படுத்த வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri