நாளை முதல் உணவு இல்லை! இலங்கையர்களை வதைக்கும் பற்றாக்குறை
நாட்டில் நிலவும் பாரிய எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை (17) முதல் உணவகங்களில் உணவு வழங்குவதை முற்றாக நிறுத்த வேண்டியுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிவாயு விநியோகத்தை முற்றாக இடைநிறுத்துவதற்கு எரிவாயு நிறுவனங்களின் தீர்மானத்தினால் உணவகங்கள் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
உணவகங்கள் மூடப்படுவதால் சுமார் 500,000 வேலை இழப்புகள் ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.
இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால் உணவகங்களில் பானைகள் அமைத்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் முகாமிடுவோம் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு சராசரி உணவகத்திற்கு நாளொன்றுக்கு இரண்டு எரிவாயு தாங்கிகள் போதாது எனவும், அதிக எரிவாயு தாங்கிகள் இல்லாத காரணத்தினால் நாளை (17) முதல் உணவகங்களை மூட வேண்டும் எனவும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.