இலங்கையில் சர்ச்சையாக மாறிய பாகிஸ்தானின் நிவாரணம் - உண்மையை அம்பலப்படுத்திய நபர்
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினை அடுத்து பாகிஸ்தானினால் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் போலியான தகவல்கள் பரபரப்பப்படுவதாக சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டஇலங்கைக்கு காலாவதியான பொருட்களை அனுப்பியதாக பாகிஸ்தான் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
எனினும் அந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை இலங்கையில் சிவில் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர் சிரந்த அமரசிங்க தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் நிவாரணம்
பாகிஸ்தானினால் வழங்கப்பட்ட அரிசி பைக்குள் அரிசி இருக்கவில்லை. வேறு பொருட்கள் இருந்ததனை அவர் உறுதி செய்துள்ளார்.

தனக்கு கிடைத்த பொதிக்குள் இருந்த பொருட்களை வைத்து அந்த இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“அந்த பொதிக்குள் திகதியிடப்பட்ட பால், பிஸ்கட் பொருட்களே இருந்தன. அதில் அரிசி எதுவும் இல்லை. பொலித்தின் பைகளுக்குள் வைத்து அவற்றினை பொதி செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதனை வழங்க முடியாமல் போய்விடும்.
இதனால் பாகிஸ்தான் படையினரின் நீண்ட காலமாக கப்பலில் பயன்படுத்திய பழைய அரிசி பைகளில் இந்த உணவு பொருட்களை பாதுகாப்பாக பொதி செய்து வழங்கியுள்ளனர்.
அரசியல் பழிவாங்கல்
அந்த பைகக்குள் காலாவதியான எந்த ஒரு பொருட்களையும் அவர்கள் வழங்கவில்லை. அதனை பெற்ற மக்களே புகைப்படம் எடுத்து இதில் அப்படி ஒன்றும் இல்லை என்பதனை உறுதி செய்துள்ளனர்.

இதனால் இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தங்களிடம் உள்ளவற்றை கொண்டு உதவி செய்ய நினைத்த பாகிஸ்தான் நாட்டினை அவமதிக்க வேண்டாம்.
இந்திய ஊடகங்கள் இவற்றினை திரிபுப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளன.
நல்ல மனதுடன் செய்யும் உதவிகளை தவறாக வெளிப்படுத்தி அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.