ஹிஷாலினி தற்கொலை செய்துகொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை!
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி தற்கொலை செய்துகொண்டமைக்கான தெளிவான ஆதாரங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி முதித்த விதானபத்திரண இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி எந்த ஆதாரமும் தரவில்லை என்றும், இது தொடர்பாக மற்றொரு நபர் ஆதாரம் அளித்ததாக மருத்துவர்களே தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இது தற்கொலை அல்லது கொலை என்பது நிபுணர்களின் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய 16 வயதான ஜூட் குமார் ஹிசாலினி என்ற சிறுமி கடந்த 3ம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களின் பின்னர் அண்மையில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 10 மணி நேரம் முன்
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam