நாட்டில் கோவிட் வைரஸ் பரவுவது தொடர்பில் தரவு பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை! - உபுல் ரோஹண
நாட்டில் கோவிட் வைரஸ் பரவுவது தொடர்பில் தரவு பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஜா-எல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கூறுகையில்,
நாட்டில் கோவிட் - 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இல்லை. நாட்டில் கோவிட் வைரஸ் பரவுவது தொடர்பில் தரவு பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால் கடந்த மூன்று நாட்களாக கம்பஹா மாவட்டத்தில் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
எனினும் கம்பஹா மாவட்டத்தில் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வைத்தியசாலைகளுக்கு வெவ்வேறு காரணங்களுக்காக சென்றிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்று உறுதியானவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்று உறுதியானவர்கள் கடந்த 24 மணித்தியாலங்களில் தொற்று உறுதியானவர்கள் என கூறப்படுகின்ற போதிலும் அவர்களுக்கு தொற்று உறுதியாவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னரே பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam