இஷாரா செவ்வந்தி தொடர்பில் பதறும் ராஜபக்சர்கள் - உண்மையை வெளிப்படுத்திய சமல்
இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போதைப்பொருள் கடத்தலுடன் ராஜபக்ச குடும்பத்திற்கு தொடர்பில்லை என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமையை வரவேற்பதாக அவர் பாராட்டியுள்ளார்.
ஆனாலும் தற்போது பரவி வரும் தகவல்களுக்கு அமைய ராஜபக்ச குடும்பத்தாருக்கும் இஷாரா செவ்வந்திக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஷாரா செவ்வந்தி குறித்து பொலிஸார் தீவிரமான மற்றும் முறையான விசாரணை நடத்த வேண்டும். பாதாள உலகக் கும்பல்கள், தங்கள் தேவைக்காக செவ்வந்தியை பயன்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தண்டனை
இஷாரா தனியாகச் செயல்பட்டதாக நினைப்பது சரியல்ல. சட்டத்திற்கமைய, அவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பு கொண்டிருந்த அனைத்து தனிநபர்களின் பெயர்கள் மற்றும் விவரங்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். மேலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
ராஜபக்ச குடும்பத்தாருக்கும் இஷாரா செவ்வந்திக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம்.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான மற்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri