விவாதம் நடத்தவே தயார் இல்லை எவ்வாறு தேர்தல் நடத்துவது : ரணில் கேள்வி
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தை இந்த வாரம் எடுத்துக்கொள்ள எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டதாக இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் இந்த விடயத்தில்; கூட, எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்தத் தயாராக இல்லாத நிலையில், தாம் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் ரம்புக்வெல்ல மீது எதிர்க்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் விவாதத்தை அரசாங்கம் இந்த வாரம் முன்னெடுக்க விரும்பியதாகவும், எனினும் எதிர்க்கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வலியுறுத்து
இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்த விடயத்தை அரசாங்கம் விரைவில் விவாதித்து முடிக்க வேண்டுமென விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமக்கு நீண்ட கால அவகாசம் வேண்டும். ஒரு நாள் மட்டுமல்ல, மூன்று நாள் விவாதம் நடத்த வேண்டும்.
இந்தநிலையில் எதனையும் தயவு செய்து ஒழுங்காகச் செய்யவேண்டும் என்று சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
