எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டே தீரும் : சபாநாயகர் சூளுரை
நாடாளுமன்றத்தில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் அமைச்சர்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர கையொப்பம் திரட்டும் நடவடிக்கை நேற்று (26) முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ் ஊடகமொன்றிடம் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
நீதியின் பக்கம்
மேலும் குறிப்பிடுகையில், “நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயர் நீதிமன்றத்தின் கட்டளையைப் புறக்கணிக்கவில்லை, அரசமைப்பை மீறவில்லை, நாடாளுமன்றச் சிறப்புரிமைகளை மீறவில்லை.

அதனால் பொய்க் குற்றச்சாட்டுக்களுக்கு அஞ்சி என் பதவி விலக மாட்டேன். எவருக்கும் பயந்து ஓடவும் மாட்டேன். நான் நாடாளுமன்றத்தில் நடுநிலையுடன் செயற்படுகின்றேன்.
எனவே, எனக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டால் அது நீதியின் பக்கம் நிற்கும் அமைச்சர்களால் தோற்கடிக்கப்பட்டே தீரும்” என்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan